பெயர்களை தேட - தட்டச்சிடலாம் அல்லது பட்டியலிலிருந்து 6 பெயர்கள் வரை தேர்ந்தெடுக்கலாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர்கள்: (X அழுத்தி விலக்கவும்)
↪வெண்முரசு நாவல் மகாபாரத காவியத்தின் இலக்கிய மறுஆக்கமாக எழுதப்பட்டது. ஆசிரியர் ஜெயமோகன் அவர்கள் தொடர்ந்து எழுபத்தொன்பது மாதங்களாக இக்காவியத்தை எழுதி நிறைவு செய்தார். ஆயிரக்கணக்கான பக்கங்களில் விரியும் இந்த நாவலை தொகுக்கும் ஒரு முயற்சியாக இந்தச் செயலி உருவாக்கப்படுகிறது. மகாபாரதத்தில் வரும் முக்கியப் பாத்திரங்களான கிருஷ்ணன், அர்ஜுனன், யுதிஷ்டிரன், பீமன், துரியோதனன், கர்ணன், திரௌபதி போன்றவரைத் தவிர, வெண்முரசு ஆயிரக்கணக்கான பாத்திரங்களை அறிமுகம் செய்து கதையோட்டத்தில் இணைத்து விவரிக்கிறது. இருபத்தாறு நூல்கள், 1932 அத்தியாங்கள், ஏறக்குறைய முப்பத்தேழு லட்சம் சொற்கள் கொண்ட இந்த நாவலில் தொழில்நுட்பம் மூலம் இப்பாத்திரப் பெயர்களை தொகுத்து, அவற்றுக்கிடையேயான தொடர்புகள், அவை இடம்பெறும் பகுதிகள் என்று இந்த செயலி சுட்டுகிறது. ஏறக்குறைய மூவாயிரம் பாத்திரங்கள் கொண்ட பட்டியலிலிருந்து குறிப்பிட்ட பாத்திரங்களை தேர்ந்தெடுத்தால் அவை இடம்பெறும் பகுதிகளை எளிதாக பார்க்க இயலும். (எடுத்துக்காட்டாக, 'பிரலம்பனும் அபிமன்யுவும் சந்திக்கும் இடம் எது', 'துண்டிகன் என்ற பெயர் எங்கே வருகிறது', 'பூரிசிரவஸும் விஜயையும் இடம்பெறும் பகுதிகள்' என்று தேடலாம்). ஒவ்வொரு பகுதியின் நீளத்தை பொறுத்து அதன் அளவு வடிவமைக்கப்பட்டுள்ளது. அடையாளம் காட்டப்பெறும் புள்ளிகளை அழுத்தினால், ஜெயமோகன் தளத்தில் அந்தப் பகுதியின் பக்கத்துக்கு சுட்டி அளிக்கப்படும். |
|
வெண்முரசு குறிச்சொற்கள் அமைப்பு | சுதா-ஸ்ரீநிவாசன் |
செயலி உருவாக்கம் | மதுசூதனன் சம்பத் |
நன்றி |
|
காப்புரிமை |
|